ஆயரின் பூதவுடல் மன்னார் புனித செபஸ்தியார் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை மூன்று மணியளவில் இலங்கையின் மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
மறைந்த ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு மரியாதை செலுத்தும் விதமாக மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்புடன் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு, தனியார் போக்கு வரத்து சேவைகளும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க்து.
