Home செய்திகள் கடும் காற்றுடன் கூடிய கன மழை – ஒட்டுசுட்டானில் வீடுகள் சேதம்:

கடும் காற்றுடன் கூடிய கன மழை – ஒட்டுசுட்டானில் வீடுகள் சேதம்:

238
0

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் நேற்றைய தினம் (4) வீசிய கடும் காற்று மற்றும் கன மழை காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பனிக்கன்குளம், கிழவன்குளம், மாங்குளம் ஆகிய கிராமங்களே இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

மூன்று கிராமங்களிலும் வீடுகளின் கூரைகள் காற்றில் வீசி எறியப்பட்டதனால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து மக்களின் உடமைகள் பல நாசமாகியுள்ளன.

அத்தோடு, கிழவன்குளம் கிரமத்தில் ஒருவர் வாழ்வாதாரத்திற்காக கோழி பண்ணை நடாத்திவந்த நிலையில் அந்த கோழி கூட்டின் மேல் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் கோழிக்கூடு முற்றாக சேதமடைந்துள்ளதோடு, கோழிகளும் பல உயிரிழந்துள்ளதாக அதன் உரிமையாளர் கவலையுடன் தெரிவித்தார்.