Home செய்திகள் இராணுவ முகாமிற்காக அளக்கப்பட்ட 40 ஏக்கர் நிலம் – மக்கள் போராட்டத்தால் நிறுத்தம்:

இராணுவ முகாமிற்காக அளக்கப்பட்ட 40 ஏக்கர் நிலம் – மக்கள் போராட்டத்தால் நிறுத்தம்:

137
0

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் – தென்மராட்சிப் பிரதேசத்திற்கு உட்பட்ட எழுதுமட்டுவாழ் வடக்கில், இராணுவத்தின் 52ஆவது படையணியின் தலைமையகம் அமைப்பதற்காக மக்களுக்குச் சொந்தமான சுமார் 40 ஏக்கர் காணியை அளவிடும் நடவடிக்கை இன்று மக்களின் கடும் எதிர்ப்பால் தடுக்கப்பட்டுள்ளது.

ஏ-9 பிரதான வீதியை மறித்து மக்களுடன் இணைந்து அரசியல்வாதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நில அளவைத் திணைக்களத்தின் செயற்பாடுகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும், தன்மானத்தையும், தமது நிலங்களையும், உரிமைகளையும் இழந்து வாழ நாங்கள் விரும்பவில்லை என்றும்  உரக்க குரல் எழுப்பி குறித்த நில அளவீட்டு நடவடிக்கை தடுத்து நிறுத்தினர். இதன்போது வீதிப் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது.