இன்று அதிகாலை இந்திய மீனவர்களின் றோளர் ஒன்று இலங்கை மீனவர் படகை மோதி சேதமாக்கியுள்ளதோடு, நீண்ட தூரம் இந்தியா நோக்கி இழுத்தும் சென்றுள்ளனர்.
சேதமான படகு மூழ்க ஆரம்பித்ததும் அதனை விட்டு விட்டு சென்றுள்ளனர்.
யாழ், மாதகல் பகுதியை சேர்ந்த குறித்த படகில் பயணித்த இரு மீனவர்களும் தமது உறவுகளுக்கு கைபேசி மூலம் தகவல் வழங்கியதை அடுத்து சில படகுகள் சென்று நடுக்கடலில் தவித்த மீனவர்களையும் அழைத்துக்கொண்டு சேதமான படகையும் கட்டி இழுத்து கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
தமிழக, மற்றும் இந்திய மீனவர்களிடையே இவ்வாறான சம்பவங்கள் விரிசலையும், முரண்பாடுகளையும் தோற்றுவிக்கலாம் எனவும், தத்தமது எல்லைகளுக்குள் ஒருவருக்கும் பாதிப்பில்லாத வகையில் கடற்தொழிலில் ஈடுபடுவது இரு தரப்பினருக்கும் பாதிப்புகள் இன்றி தொடர்ந்து தமது தொழிலை தொடர உதவும்.