Home செய்திகள் மக்களை நேசித்த மகானுக்கு தமிழர்கள் செய்யும் மிகப்பெரும் இறுதி மரியாதை:

மக்களை நேசித்த மகானுக்கு தமிழர்கள் செய்யும் மிகப்பெரும் இறுதி மரியாதை:

11
0

மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அதிவணக்கத்திற்கு உரிய ஓய்வு பெற்ற ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகையின் திருவுடலுக்கு பெருந்திரளான மக்கள் தமது இறுதி அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

நாளை (04/04) ஞாயிறு பிற்பகல் 3:00 மணிக்கு அங்கிருந்து ஆயரின் திருவுடல் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அங்கும் இலங்கையில் பல பாகங்களில் இருந்தும் வரும் மக்கள் ஆயரின் திருவுடலுக்கு தமது அஞ்சலிகளை செலுத்திக் கொள்ளலாம்.

திங்கட் கிழமை (05/04) மாலை 3:00 மணிக்கு இலங்கையின் அனைத்து மாவட்ட ஆயர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியாக இறுதி திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்ட பின் ஆயரின் திருவுடல் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம் துக்கதினமாக அனுஷ்டிக்க பல தமிழர் தரப்பினர் கோரியுள்ள போதும், அதை ஏற்று வடக்கு, கிழக்கு எங்கும் கறுப்பு வர்ண கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்க நாளாக முழுமையாக கடைப்பிடிப்பதே மக்களை நேசித்த அந்த மகானுக்கு தமிழர்கள் செய்யும் மிகப்பெரும் இறுதி மரியாதையாக அமையும்.