நேற்றைய (01/04) தினம் காலமான ஓய்வுபெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு யாழ்பாணத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வுகளும், வழிபாடும் இடம்பெற்றதை தொடர்ந்து ஆயரின் திருவுடல் இன்று (02/04) வாகன பவனியாக மன்னார் எடுத்து செல்லப்பட்டது.
பூநகரி, முகங்காவில் பகுதி ஊடாக மன்னார் சென்ற ஆயரின் திருவுடலுக்கு கிளிநொச்சி மாவட்ட மக்களும் வீதிகளில் ஆங்காங்கே ஒன்றுகூடி மாலை அணிவித்தும், மலர்தூவியும் தமது இறுதி அஞ்சலிகளை செலுத்தினர்.
இதேவேளை முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள தூய முழங்காவில் மாதா ஆலய முன்றலில் இறுதி அஞ்சலிக்கான சிறப்பு ஏற்பாட்டுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை முதல் ஞாயிறு வரை மன்னாரில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள ஆயரின் திருவுடல் திங்களன்று இறுதி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.