Home செய்திகள் கோட்டபாயவின் நெருங்கிய சகா சஜித் அணியில் இணைந்தார்.

கோட்டபாயவின் நெருங்கிய சகா சஜித் அணியில் இணைந்தார்.

200
0

முன்னாள் பாதுகாப்பு செயலரும், தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டபாய ராஜபக்ஷ வின் நெருங்கிய சகாவும், அவரை ஆதரித்து வந்தவருமான major general bonifas perera எதிரணியான சஜித் அணியில் இணைந்து கொண்டுள்ளார்.

முன்னாள் வன்னி பாதுகாப்பு படைத்தளபதியாகவும், பாதுகாப்பு தளபதிகள் அலுவலகத்தில் இயக்கு நர் பொதுப் பணிப்பாளராகவும் முன்னர் கடமையாற்றியிருந்த major general bonifas perera வை வரவேற்ற சஜித் அணி தமது கட்சியின் புலனாய்வு அணி மற்றும் நிபுணத்துவ சங்கத்தின் ஆலோசகராகவும் நியமித்துள்ளது.

இறுதிக்கட்ட போரின் போதும், அதன் பின்னரும் பொதுமக்கள் மற்றும் சரணடைந்த போராளிகளின் படுகொலைகளுக்கு காரணமாக இருந்த முக்கிய இராணுவத் தளபதிகளில் major general bonifas perera வும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.