Home செய்திகள் வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் சில குடும்பங்களுக்கு இன்று (01) உதவிகள் வழங்கப்பட்டது:

வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் சில குடும்பங்களுக்கு இன்று (01) உதவிகள் வழங்கப்பட்டது:

176
0

யாழ்ப்பாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் குழந்தைகளுக்கான தயாரிப்புகள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் என்பன இன்று வழங்கி வைக்கப்பட்டன.

காங்கேசந்துறை, திஸ்ஸ ரஜமஹா விஹாரையில் இஅடம்பெற்ற இந்த நிகழ்வு நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவத்தின் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பெளத்த மத குருமார்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா படையினர் மக்களை சொந்த இடங்களில் மீள் குடியேற விடாது தொடர்ந்தும் இன்னல்களுக்குள் வைத்துக்கொண்டு அவ்வப்போது மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் போல் இவ்வாறான உதவி நாடகங்கள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.