ஒரு வார காலமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு முழுமையாக முடக்கப்பட்டுள்ள திருநெல்வேலி பால்பண்ணை கிராம மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளது சந்நிதியான் ஆச்சிரமம்.
நல்லூர் பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் திருநெல்வேலி மத்தி வடக்கு கிராமசேவையாளர் அலுவலகத்தில் வைத்து குறித்த உணவு, மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
