Home உலக செய்திகள் எதிர்ப்புகளையும் மீறி இலங்கையர்களை நாடு கடத்தியது ஜேர்மனி!

எதிர்ப்புகளையும் மீறி இலங்கையர்களை நாடு கடத்தியது ஜேர்மனி!

150
0

கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் 31 புகலிட கோரிக்கையாளர்களை நேற்றைய தினம் இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது ஜேர்மனி.

இவ்வாறு நேற்றைய தினம் நாடுகடத்தப்பட்டவர்கள் இன்று இலங்கை சென்றடைய உள்ள நிலையில் அங்கு இலங்கை புலனாய்வாளர்கலினால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்படவும், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படவும் வாய்ப்புக்கள் உள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 35 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில் அவர்களில் நால்வர் இறுதி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டிருந்த போதும், ஏனைய 31 புகலிடக் கோரிக்கையாளர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இது போன்று மேலும் 65 புகலிட கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு தயாராக விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தங்குவிடுதியில் பலத்த பாதுகாப்போடு தங்கவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.