ஜெர்மனி – டஸ்ஸெல்டோப் விமான நிலையத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் இலங்கை வந்தடைந்தனர்.
நேற்றைய தினம் ஜெர்மனியில் இருந்து wamos மூலம் அனுப்பிவைக்கப்பட்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களே இவ்வாறு இன்று காலை 10:40 மணியளவில் கட்டுனாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குறித்த நபர்களை கொரோனா தடுப்பு சட்டவிதிகளுக்கு உட்பட்டு தனிமைப் படுத்தல் நடவடிக்கைக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்ததும் குறித்த அனைவரையும், இலங்கை குற்றத் தடுப்பு புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்போம் என இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
தொடர்புபட்ட செய்தி: இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட தமிழர்கள்