மாகாண சபைகள் தேர்தலை புதிய முறையில் நடத்துவதற்கும், சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தொகுதிவாரியாக 70 வீத பிரதிநிதிகளையும், விகிதாசார அடிப்படையில் 30 வீத பிரதிநிதிகளையும் தெரிவு செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள யோசனைகள் அமைச்சரவையில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதேபோன்று ஒரு தொகுதியில் ஒரே கட்சியை சேர்ந்த 3 வேட்பாளர்கள் போட்டியிடும் வகையிலும், மாகாணத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்றுக்கொள்ளும் கட்சிகளுக்கு வழங்கப்படும் போனஸ் ஆசனங்களின் எண்ணிக்கையை ஒரு மாவட்டத்திற்கு இரண்டு ஆசனங்கள் என்ற ரீதியில் அதிகரிக்கவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.