பன்னிப்பிட்டியில் லொறி சாரதியை கழுத்தை மடக்கி கீழே விழுத்தி பின் எகிறி குதித்து கொடூரமாக தாக்கிய போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சி வெளியானதையடுத்து அக் கொடூர செயலௌக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டும், அவ்வாறு நடந்துகொண்ட பொலிஸ் கான்ஸ்டபிளை தண்டிக்க கோரியும் பல மட்டங்களில் இருந்தும் இலங்கை காவல்துறையினருக்கு அளுத்தங்கள் சென்றதை அடுத்தே மேற்படி கைதும், பணி நீக்கமும் இடம்பெற்றுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீதான ஒழுக்காற்று, மற்றும் குற்ற விசாரணை இடம்பெறும் என பொலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பிநும் இது தற்போது சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை தொடர்பான பிரச்சனையை மேலும் சிக்கலாக்கலாம் என்ற கோனத்திலேயே குறித்த கான்ஸ்டபிளை தற்காலிக பணி நீக்கம் செய்து விசாரணை இடம்பெறுவதாக இலங்கை அரசாங்கம் நாடகம் ஆடுவதாக நம்பப்படுகிறது.