
முல்லைத்தீவு மக்கள் தமது வீட்டுத்திட்டத்தின் மீதி கொடுப்பனவை விரைந்து கொடுக்குமாறு வலியுறுத்தி இன்று (29) போராட்டம் ஒன்றை நடாத்தி வருகின்றனர்.
மாங்குளத்தில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முல்லைத்தீவு மாவட்ட காரியாலயம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இஅடம்பெற்று வருகிறது.
வீட்டு திட்டத்திற்கான மீதிக் கொடுப்பனவுகள் வழங்கப்படாத நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு தாம் முகம் கொடுத்து வருவதாக கூறும் முல்லைத்தீவு மக்கள் தமக்கான வீட்டுத்திட்டத்தின் மீதி கொடுப்பனவை விரைந்து கொடுக்குமாறு வலியுறுத்தியே குறித்த போராட்டம் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.