யாழ்பாணம் முத்திரை சந்தியில் அமைந்துள்ள கிட்டு பூங்காவிற்கு கடந்த இரவு 10:00 மணியளவில் விசமிகள் தீயிட்டு எரித்துள்ளனர்.
1995 இன் நடுப்பகுதியில் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசமாக அப் பகுதி சென்றதை அடுத்து அங்கிருந்த பெரும்பாலான பகுதிகள் இடித்து அழிக்கப்பட்டும், சேதமாக்கப்பட்டும் இருந்தன.
இருப்பினும் அதன அடையாளமாக இன்று வரை திகழும் வாயில் குடிலும், சிறு குகையும் பழைய நினைவுகளை மீட்பதாய் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.