
அதிமுக அல்லது திமுக வெல்வது என்பது வழமையான வெறும் நிகழ்வு மட்டுமே… ஆனால் இம்முறை தேர்தலில் நாம் தமிழர் கட்சி வென்றால் அது புரட்சி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
ஏப்ரல் 6ம் திகதி, தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலிற்கான பரப்புரையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பெரம்பலூரில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரையின் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்..
இந்தியாவை விற்பதில் காங்கிரஸுக்கும் பாஜகவிற்கும் போட்டி நடக்கிறதென நான் பத்தாண்டுகளுக்கு முன்பு சொன்ன போது யாரும் நம்பவில்லை. இந்தியாவின் பொருளாதாரத்தை வலிமைபடுத்தும் இடத்தில் தமிழகம் இருக்கிறது. ஆனால், தமிழகத்திற்கு தரவேண்டிய ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி வருவாய்களை மத்திய அரசு தரவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
புரட்சியால் ஒரு விதி செய்வோம். அழிவிலிருந்து தமிழையும், தமிழ் நாட்டையும் மீட்போம். என்றார்.