யாழ். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால், இன்று (28/03) யாழ். நகர் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் PCR பரிசோதனைக்காக அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நேற்றைய தினமும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 143 கொரோனா நோய் தொற்றாளர்கள் புதிதாக இனம்காணப்பட்ட நிலையிலேயே இன்று இந்த நிலை காணாப்படுகிறது.
இலங்கையிலேயே கொரோனா நோய் பரவல் ஆரம்பமான காலம் முதல் இலங்கையில் எங்குமில்லாத வகையில், துரித கெதியில் அர்ப்பணிப்போடு செயற்பட்டு பல மாதங்களாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகம் தென்னிலங்கையில் இருந்து அமைச்சர் மட்டத்தில் வந்த கடுமையான அழுத்தங்கள் காரணமாக சுகாதார நடைமுறை சார்ந்த இறுக்கமான கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் காரணமும், அரன் காரணமாக எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தென்னிலங்கையில் இருந்து மக்கள் அதிகளவில் யாழ் மாவட்டத்திற்குள் வந்து சென்றமையாலுமே தற்போதைய அச்ச நிலையும், கொரோனா அதிகரிப்பும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.