Home செய்திகள் முதலாவது வைத்தியராக கிராமத்திற்கு பெருமை சேர்ந்த திருச்செல்வி:

முதலாவது வைத்தியராக கிராமத்திற்கு பெருமை சேர்ந்த திருச்செல்வி:

141
0

மட்டு – வெருகல் பிரதேசத்தை சேர்ந்த த.திருச்செல்வி வைத்தியத்துறையில் கல்வியை நிறைவு செய்து தனது கிரமத்திற்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இலங்கை, முகத்துவாரம் இந்து கல்லூரியில் கல்விகற்ற இவர் தற்போது வைத்தியராக பணியாற்ற தொடங்கியுள்ளதோடு, இவரே வெருகல் பிரதேசத்தின் முதலாவது வைத்தியர் ஆகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சகல துன்பங்களையும் கடந்து, பொருளாதார வளர்ச்சி இன்றியும், போர் வடுக்களை சுமந்தும், அனைத்து வழிகளிலும் பின் தங்கிய கிராமமாக இன்றுவரை காணப்படும் வெருகல் பிரதேசத்தின்மாணிக்கமாக, சாதனைப் பெண்ணாக திருச்செல்வி இன்று திகழ்கிறார்.

இந்த சாதனைப் பெண்ணுக்கு தமிழ் நாதம் குழுமம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.