யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில், தடை செய்யப்பட்ட சுருக்கு வலை மீன்பிடி முறையில் சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தவர்களின் வாடிகள் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப் பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் மணல்காடு கடற்கரையில் வாடிகல் அமைத்து தங்கியிருந்து சுருக்கு வலை மீன்பிடி முறை மூலம் தொழிலில் ஈடுபட்டு வந்த தென்னிலங்கை மீனவர்களின் வாடிகளே இவ்வாறு தீயிட்டு கொலுத்தப்பட்டுள்ளது.
சுருக்கு வலை மீன்பிடி முறை, மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கையால் வடமராட்சி, மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தமையும், சுருக்கு வலை மீன்பிடி முறையால் மீன் குஞ்சுகள் உட்பட அனைத்தையும் அள்ளி எடுப்பதால் கடலில் மீன் வளம் அழிக்கப்பட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.