Home தாயக செய்திகள் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் முற்றாக முடக்கம்!

திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் முற்றாக முடக்கம்!

160
0

திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் முற்றாக முடக்கப்பட்டுள்ளதோடு, கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் தெரிவித்தார்.

குறித்த கிராமத்தில் 51 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயம் மற்றும். திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி என்பன மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது.

அந்தப் பகுதியில் இருந்து அத்தியாவசிய சேவை மற்றும் தொழில் நிமிர்த்தம் வெளியில் செல்பவர்கள் அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.