Home செய்திகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 19 பேருக்கு கொரோனா தொற்று – அவசர தேவை இன்றி வருவதை...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 19 பேருக்கு கொரோனா தொற்று – அவசர தேவை இன்றி வருவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்:

39
0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட 19 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து அவசர தேவை இன்றி வைத்தியசாலைக்கு வருவதை தவிர்க்குமாறு வைத்தியசாலை நிர்வாகம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நேற்றைய (26) தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2 மருத்துவர்கள், 3 தாதியர்கள், 4 சுகாதார ஊழியர்கள், மருத்துவ பீட மாணவர்கள் இருவர், தாதிய மாணவர் ஒருவர், சுத்திகரிப்புப் பணியாளர் ஒருவர், மற்றும் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேர் என 19 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் இருவருக்கும், காரைநகரில் சுயதனிமைப்படுத்தப்பட்ட மூவருக்கும், திருநெல்வேலி பொதுச் சந்தையைச் சேர்ந்த மேலும் இருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவை தவிர, மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாந்தை மேற்கைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் தொடர்புடைய இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.