Home உலக செய்திகள் பிரித்தானியாவில் மேலும் 6 மாதத்திற்கு நீடிக்கப்படவுள்ள (lockdown) சமூக முடக்கம்:

பிரித்தானியாவில் மேலும் 6 மாதத்திற்கு நீடிக்கப்படவுள்ள (lockdown) சமூக முடக்கம்:

117
0

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் அவசரகால “சமூக முடக்க” நடவடிக்கைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, செப்டம்பர் வரை அவசரகால அதிகாரங்களை நீட்டிப்பதற்கு ஆதரவாக House of Commons ஒப்புதல் அளித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட lockdown விதிமுறைகளை படிப்படியாக தளர்த்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தையும் (Roadmap) அவர்கள் அங்கீகரித்தனர்.

இருப்பினும் இச் சட்டம் உடனடியாக அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்படாத போதிலும், பாராளுமன்ற அங்கீகாரம் கிடைத்துள்ளதால் எந்த நேரத்திலும் மீளவும் இறுக்கமான சமூக முடக்க (lockdown) அறிவிப்புக்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக ஜூன் 21 முதல் முற்றாக தடை நீங்கிவிடும் என எதிர்பார்த்து கொண்டாட்டங்களுக்கு தயாராகிவிட்ட மக்களுக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் கிடைத்துள்ளது.

கொரோனா நோய் தொற்றின் மூன்றாம் அலை உலகின் பல நாடுகளை தாக்க ஆரம்பித்துள்ளதும், பிரித்தானியாவிற்கு அண்மித்த ஐரோப்பிய நாடுகள் இதனால் பெரிதும் பாதிப்புற்று மீண்டும் கொரோனா வைரஸ் அவசரகால “சமூக முடக்க” lockdown நடவடிக்கைகளை இறுக்கமாக்கிவருவது தெரிந்தும் கொண்டாட்டங்களை எதிர்பார்த்து குதூகலித்த மக்களுக்கு ஏமாற்றமும், பண நஷ்டமும் ஏற்படவுள்ளது.

பெரும் பணச்செலவில் திருமண நிகழ்வுகள், பூப்புனித நீராட்டு விழா, பிறந்த நாள் கொண்டாட்டம், மற்றும் ஒன்றுகூடல் கழியாட்டங்களுக்கு தம்மை தயார் படுத்தியவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.