Home உலக செய்திகள் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் தொடர்பில் யாழ் பல்கலைக்கு விஜயம் செய்த கனேடியத் தூதுவர்:

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் தொடர்பில் யாழ் பல்கலைக்கு விஜயம் செய்த கனேடியத் தூதுவர்:

31
0

கனேடிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் (National Languages Equality Advancement Project (NLEAP)) முன்னேற்றம் தொடர்பாக, நேற்று கனேடியத் தூதுவர் டேவிட் மக் கினொன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று கலந்துரையாடியுள்ளார்.

நேற்று (26/03) மாலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடியத் தூதுவர் டேவிற் மக் கினொன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பீடாதிபதிகள், பதிவாளர் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கை துறையைச் சேர்ந்த விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தற்போதைய நிலை, திட்டத்தை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் ஆரயப்பட்டுள்ளது.