
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மூத்த மகன் சாரங்கன் மீது 8 பேர் கொண்ட இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் வீட்டு வாசலில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் கண்ணாடி போத்தல்கள் மற்றும் இரும்பு கம்பிகள் மூலம் சாரங்கன் மீது தாக்குதல் நடாத்திய குழு அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தி சென்றுள்ளது.