Home செய்திகள் நிலாவரை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினரால் இன்று (26)மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்:

நிலாவரை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினரால் இன்று (26)மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்:

17
0

யாழ் – புத்தூர் நிலாவரை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர் இன்று (26) மீண்டும் அகழ்வுப் பணிகளை தொடங்கியதை அடுத்து விரைந்த வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் பொதுமக்கள் இணைந்து எதிர்ப்பை வெளியிட்டு அகழ்வு பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து தொல்லியல் திணைக்களத்தினர் தவிசாளருக்கு எதிராக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் தவிசாளரை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைத்துள்ளனர்.

நிலாவரை கிணற்றை அண்மித்த பகுதியில் கடந்த மாதம் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பினால் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.