Home தாயக செய்திகள் கொரோனா தொற்று – தேசிய மட்டத்தில் முதல் இடம் பிடித்த யாழ் மாவட்டம்!

கொரோனா தொற்று – தேசிய மட்டத்தில் முதல் இடம் பிடித்த யாழ் மாவட்டம்!

36
0

இலங்கையில் கொரோனா தாக்கம் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் தடவையாக நேற்றைய கொரோனா நோய் தொற்று புள்ளிவிபரங்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.

நேற்றைய (25) தினம் நாடு முழுவதுமாக இனம் காணப்பட்ட கொரோனா நோ தொற்றாளர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 77 பேர் இனம் காணப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே வேளை, கொழும்பு மாவட்டத்தில் 64 கொரோனா நோய் தொற்றாளர்களும், ஹம்பஹா மாவட்டத்தில் 27 கொரோனா நோய் தொற்றாளர்களும் நேற்றைய தினம் இனம் காணப்பட்டுள்ளனர் என கொரோனா நோய் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த மாவட்டங்களிலேயே கொரோனா நோய் தொற்று அதிகம் காணப்பட்ட போதிலும் முதல் தடவையாக 24 மணித்தியாலங்களில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் யாழ் மாவட்டத்தில் இனம் காணப்பட்டமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொது மக்கள், மற்றும் வர்த்தகர்கள் உட்பட அனைவரும் காட்டிய அசமந்த போக்கும், சுகாதார நடைமுறைகளை கட்டுப்படுத்த தவறிய காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகளுமே இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

இந் நிலையில் இது குறித்த யாழ் அரசாங்க அதிபரின் அவசர ஒன்றுகூடலை அடுத்து இன்று யாழ் நகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு சுகாதார நடைமுறைகள் அவதானிக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.