வடக்கில் இருவேறு கடற்பகுதியில் இன்று அதிகாலை 34 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இன்று (25/03) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த கைது நடவடிக்கையில், மன்னார் கடற்பரப்பில் 20 மீனவர்களும், அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 ராமேஸ்வரம் மீனவர்களும் இலங்கை கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்துள்ளதாகவும், அவர்கள் பயனித்த படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.