யாழ்ப்பாணத்தில் நேற்றை (24) தினமும் 33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து தீவிரமடைந்து வரும் கொரோனா பரவலால் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாற்றாக மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 24 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு யாழில் தற்போது கொரோனா பரவல் தீவிரமடைய மக்களினதும், சுகாதார, மற்றும் காவல் துறையினரினதும் அலட்சியப் போக்கே காரணமாக உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
குறிப்பாகா, யாழ் மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் வியாபாரிகள் முகக்கவசம் அணியாது உள்ளதையும், மக்கள் சமூக இடை வெளி இன்றி கூட்டம்மாகவும், நெரிசலாகவும் நிற்பதை காண முடிகிறது. மக்களும் முகக்கவசம் அணியாது செல்வதை காண முடிகின்ற போதும், அவர்களை முகக்கவசம் அணிந்து வந்தாலே வியாபார நிலையங்களில் உள் நுளைய முடியும் என வர்த்தக நிலையங்கள் சொன்னால் அவர்கள் வேறு வழி இன்றி உட் செல்லும் போதாவது முகக்கவசங்களை அணிந்து கொள்வர். இதற்கு வர்த்தக நிலைய உரிமையாளர் சங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதே போல், வைத்தியசாலைகளிலும் மக்கள் கூட்டமாக இருப்பதையும், அதனை வைத்தியசாலை நிர்வாகம் கண்டுகொள்ளாமலும், சமூக இடைவெளியை வலியுறுத்தாமையும் கொரோனா பரவலுக்கான காரணமாக அமைகிறது.