Home செய்திகள் மக்களின் பிரச்சனைக்கு அபிவிருத்தியே தீர்வு: கோட்டாபாய

மக்களின் பிரச்சனைக்கு அபிவிருத்தியே தீர்வு: கோட்டாபாய

9
0

இலங்கையில், நீண்டகாலமாக நிலவும் மக்களின் பிரச்சனைக்கு அபிவிருத்தியே தீர்வு எனவும், அதற்கான ஒரு தெளிவான கொள்கையும், திட்டமும் தமது அரசாங்கத்தால் செயற்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்தார்.

நேற்று () பிற்பகல் நுகேகொட வெளிபார்க் பூங்காவில் இடம்பெற்ற சிறீலங்கா பெரமுனவின் இணை அமைப்பு பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் தமக்கு வாக்களித்து ஆட்சியை வழங்கிய மக்கள் தமது கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும், பாதுகாக்கவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவுமே விரும்பினர். அதனையே நான் செய்கிறேன். ( இதில் இவர் குறிப்பிடும் வாக்களித்த மக்கள் என்பது சிங்கள பெளத்த மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது)

ஆட்சிக்கு வந்து 16 மாதங்களே ஆகின்ற நிலையில் எமது கலாச்சார பாரம்பரியங்களை பணி பாதுகாத்தும், அபிவிருத்திகளை முன்னெடுத்தும் வரும் எமக்கு கடந்த ஆட்சியாளர்களால் விட்டுச் செல்லப்பட்ட பிரச்சனைகளினால் தடைகள் ஏற்படுகிறது. அவை பற்றி கதைக்கவும், அதை பற்றி ஆராயவும் அதிக காலமும், நிதியும் செலவாகிறது.