Home செய்திகள் மன்னாரில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

மன்னாரில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

7
0

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை  உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மாடு தேடிச் சென்ற நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை(23) மாலை குறித்த சடலத்தை அவதானித்த நிலையில் குறித்த சடலம் தொடர்பாக காவற்துறையினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் காவற்துறையினர் சடலத்தை அவதானித்ததோடு, மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

உருக்குலைந்த நிலையில் காணப்படும் குறித்த சடலம் இதுவரை இனம் காணப்படாத நிலையில், கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் குறித்த கொலை இடம்பெற்று சுமார் 3 வாரங்களுக்கும் மேலாக இருக்கலாம் என தெரிவித்துள்ள்அனர்.

இன்று புதன் கிழமை (24) காலை சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு தடயவியல் நிபுணத்துவ காவற்துறையினர் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில்
குறித்த சடலத்திற்கு அருகில் பாதனியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரனைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.