Home உலக செய்திகள் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நாளை வரை ஒத்திவைப்பு:

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நாளை வரை ஒத்திவைப்பு:

10
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.ஜெனிவாவில் தற்பொழுது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து இன்றைய தினம் வாக்கெடுப்பு நடாத்தப்படவிருந்தது.எனினும் சில திட்டமிடல் பிரச்சினைகள் காரணமாக வாக்கெடுப்பை ஒத்திவைக்க ஜெனீவாவில் உள்ள அதிகாரிகள் தீர்மானித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம், இந்த தீர்மானத்தை ஆதரிக்க பெரும்பாலான நாடுகள் முடிவு செய்துள்ளதால், வாக்களிப்பு இலங்கைக்கு எதிராக முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் கிரமமாக்கப்பட வேண்டுமெனவும், மனித உரிமை நிலைமைகள் கண்காணிக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.