Home உலக செய்திகள் சர்ச்சைக்குரிய வழக்கில் இருந்து பிரியங்க பெர்னாண்டோவை விடுவித்தது பிரிட்டன் உயர் நீதிமன்று!

சர்ச்சைக்குரிய வழக்கில் இருந்து பிரியங்க பெர்னாண்டோவை விடுவித்தது பிரிட்டன் உயர் நீதிமன்று!

33
0

பிதித்தானியாவில் – தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் என சைகை கூலம் காட்டி தமிழர்களை அச்சுறுத்திய வழக்கில் இருந்து மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவை பிரிட்டன் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

தமிழர் தரப்பால் தொடுக்கப்பட்ட வழக்கை ஏற்று கடந்த 201̀9 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் திகதி மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவை குற்றவாழியாக அறிவித்த வெஸ்ட்மினிஸ்டர் தீதிவான் நீதிமன்றம் அவருக்கு இராஜதந்திர விலக்கு அளிக்கவும் மறுத்திருந்தது.

இரஜதந்திர விலக்களித்து வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கம் செய்த மேன் முறையீட்டின் மீதான தீர்ப்பை நேற்று (19) வழங்கிய இங்கிலாந்து உயர் நீதிமன்றம் “இங்கிலாந்தின் இராஜதந்திர ஊழியர்களுக்கு வெளி நாடுகளில் வழங்கப்படும் சமமான பாதுகாப்பிற்கு ஈடாக இராஜதந்திர விலக்கு என்ற கோட்பாடு இங்கிலாந்தில் உள்ள அனைத்து இராஜதந்திர ஊழியர்களுக்கும் பாதுகாப்பை வழங்குகிறது என்ற அடிப்படையில் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவுக்கும் இராஜதந்திர விலக்கு அளித்து வழக்கில் இருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளது.