Home செய்திகள் தடைகளை மீறி மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற போராட்டம்!

தடைகளை மீறி மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற போராட்டம்!

20
0

மட்டக்களப்பில் இன்று போறாட்டம் ஒன்றை நடாத்த தமிழ் மக்கள் தயாராகி இருந்த நிலையில் அதற்கு தடை உத்தரவு நீதிமன்றினால் வழங்கப்பட்டதை அடுத்து அதையும் மீறி திடீரென போராட்ட இடத்தை மாற்றி தமது போராட்டத்தை முன்னெடுத்து பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் போராட்டக்காரர்கள்.

தம்மை ஏமாற்றியதை அறிந்த பொலிஸார் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்று அங்கும் தடைகளை போட முயன்ற போதும், அப்பகுதியில் போராட்டம் நடாத்த நீதி மன்ற தடை உத்தரவு இல்லாததால் அது பிசுபிசுத்து போகவே போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தனர்.

வந்தாறுமூலை பனிங்கையடி ஆலயத்திலிருந்து சித்தாண்டி வரை இடம்பெற்ற குறித்த போராட்டத்தில், முன்னாள் எம்.பி க்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், முன்னாள் அரச அதிபர் மா.உதயகுமார், த.தே.ம.மு தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் சுரேஸ், ஜனநாயக போராளிகள் கட்சியைச் சேர்ந்த நகுலேஸ் உட்பட ஏராளமான மக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.