Home செய்திகள் கன்னியா வெந்நீரூற்று வழக்கு – சமரசத்துடன் முடுவுக்கு வந்தது:

கன்னியா வெந்நீரூற்று வழக்கு – சமரசத்துடன் முடுவுக்கு வந்தது:

10
0

கன்னியா வெந்நீரூற்று வழக்கு இரு சாராரும் முன்வைத்த சமாதான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி இளஞ்செழியன் வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.

இதந் பிரகாரம், இந்து கோயில் கட்டுவதற்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதுடன், தொல்பொருள் தூபி என்றழைக்கப்படும் பகுதி பாதுகாக்கப்படும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (19/03) குறிக்கப்பட்ட சமாதான உடன்படிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த உடன்படிக்கையில் தொல்பொருள் ஆணையாளர் பேராசிரியர் மனதுங்க, திருகோணமலை அரச அதிபர், மனுதாரர் கோகிலரமணி, மனுதாரரின் சட்டத்தரணி மற்றும் அரச சட்டவாதி ஆகியோர் கையொப்பமிட்ட உடன்படிக்கையைத் தாக்கல் செய்து அரச சட்டவாதி ஜெயந்தி சாருக்க எக்கநாயக்க நீதிமன்றில் சமாதான உடன்படிக்கையை ஒப்புக்கொண்டு வழக்கை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரியுள்ளார்.

சட்டதரணி சயந்தன் உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டதாக அறிவித்ததை அடுத்து, இந்து கோயில் கட்டுவதற்கான அனுமதியும், தொல்பொருள் சார்ந்த பௌத்த தூபி பாதுகாக்கப்படும் என்ற அனுமதியும் உடன்படிக்கையில் முக்கிய இடத்தை பெற்றதை அடுத்து இரு சாராரும் முன்வைத்த கோரிக்கையை ஏற்று நீதிபதி இளஞ்செழியன் வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.