Home செய்திகள் வட்டக்கச்சி மக்கள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி!

வட்டக்கச்சி மக்கள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி!

19
0

வட்டக்கச்சி மக்கள் இன்று மாபெரும் மக்கள் பேரணி ஒன்றை இன்று கிளிநொச்சியில் நடாத்தியுள்ளனர்.

இன்று காலை வட்டக்கச்சியில் இருந்து உழவு இயங்திரங்களில் கிளிநொச்சியை வந்தடைந்த மக்கள் “காக்கா கடை” சந்தீயில் இருந்து A9 வீதியூடாக மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியாக மாவட்ட செயலகம் சென்று அரச அதிபரிடமும், காவல்துறை உயர் அதிகாரியிடமும் மனுக்களை கையளித்தனர்.

எமது கிராமத்தின் சிறந்த சமூக சேவகனும், மக்களையும் மண்ணையும் நேசித்த நல்ல மனிதனும், நல்ல விளையாட்டு வீரனுமான அருளம்பலம் துஸ்யந்தன் இம் மாதம் 10ம் திகதி குத்தி கொலை செய்யப்பட்டமையை கண்டித்தும், அதற்கு நீதி கோரும் முகமாகவுமே இப் போராட்டம் இடம்பெற்றது.

துஸ்யந்தநின் கொலையின் பின்னால் தமது கிராமத்தில் நடைபெறும் கஞ்சா, கசிப்பு விற்பனை மற்றும் மணல் கடத்தல் ஆகியவை இருப்பதாகவும், சமூக நலன் கருதி கடுமையாக எத்திர்த்து வந்ததனால் துஸ்யந்தன் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் அதற்கான நீதியை பெற்று தரும்படியும், கொலையாளிகளுக்கு உடந்தையாக பொலிஸார் செயற்படக்கூடாது எனவும் அம் மகஜரில் மக்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தனர்.