Home செய்திகள் மட்டுவிலில் – மனைவியை கொன்ற கணவன்!

மட்டுவிலில் – மனைவியை கொன்ற கணவன்!

7
0

யாழ்- தென்மராட்சிப் பிரதேசத்திற்கு உட்பட்ட மட்டுவில் கிராமத்தில் மனைவியின் கழுத்தை துண்டித்து கொலை செய்த கணவனின் செயல் அவ்வூர் மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு வலுப்பெற்று இறுதியில் கொலையில் முடிந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

நேற்றைய (16) தினம் இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் மட்டுவில் தெற்கு பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டவராவார். குறித்த பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட சடலம் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.