Home செய்திகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார தொண்டர்களில் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார தொண்டர்களில் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

33
0

யாழில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மற்றுமொரு பெண் சுகாதார தொண்டர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இன்று (16) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் மூன்று பெண் சுகாதார தொண்டர்கள் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருத நிலையில் இன்றையதினம் மேலும் ஒரு பெண் சுகாதார தொண்டர் மயக்கமடைந்ததை அடுத்து அவசர நோயாளர் காவு வண்டியின் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து 16 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சுகாதாரப் தொண்டர்கள் கடந்த 8 நாட்களாக உண்வு தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் குறித்த சுகாதார பணியாளர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

கலந்துரையாடலின் போது ஜனாதிபதியுடன் கதைத்து தீர்வினைப் பெற்றுத் தருவதாக தெரிவித்த போதும், அதனை எப்போது பெற்று தருவது என உறுதிமொழி வழங்கவில்லை எனத் தெரிவித்து சுகாதார பணியாளர்கள், ஆளுநரின் உறுதிமொழியில் தமக்கு திருப்தி இல்லை என்றதன் அடிப்படையிலும், தமக்குரிய நியமனம் பெறுவதில் நீண்ட நாட்கள் செல்லக் கூடிய நிலை காணப்படுவதன் காரணமாகவும் தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.