இன்று (16) மதியம் பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் நோக்கி பயனித்த பேரூந்து ஒன்று தொடரூந்துடன் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம் அடைந்துள்ளதுடன் சிலர் மன்னார் பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற ரயில் கடவையை பேருந்து கடக்க முயன்ற நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இந்த விபத்தில் அதிகமாக பாடசாலை மாணவர்களே காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
