
கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் அண்மையில் கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்கள் மீது இன்று காலை பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உயிரிழந்த நபரின் வீட்டிலிருந்த பொருட்களை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் உறவினர்கள் பொலிஸாரின் உதவியுடன் இன்று காலை எடுத்துச் செல்ல முற்பட்டனர். இதன்போது அங்கு ஒன்று கூடிய கிராம மக்கள், கத்திக்குத்துக்கு பலியானவரின் மனைவி மற்றும் உறவினர்கள் , பொலிஸார் சந்தேக நபர்களுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றம் சுமத்தியதை அடுத்தே அவர்கள் மீது பொலிஸார் சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதே வேளை, பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட சம நேரத்தில் கத்தியால் குத்திய நபரின் வீட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
வீட்டில் ஏற்பட்ட தீ பரவலை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதும், தீ பரவலுக்கு பொலிஸாரும், அவர்களோடு வந்தவர்களுமே காரணம் என ஊர் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
