Home செய்திகள் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்த முயலும் எவரையும் கைதுசெய்ய தயங்கமாட்டோம்: பாதுகாப்பு செயலாளர்

பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்த முயலும் எவரையும் கைதுசெய்ய தயங்கமாட்டோம்: பாதுகாப்பு செயலாளர்

11
0

நியாயமற்ற விஷயங்களை யாரும் நியாயப்படுத்த முடியாது. சமூகங்களுக்கும் மதத்திற்கும் இடையேயான ஆரோக்கிய ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கு எதிராகவும் நாம் விரைவாக செயல்பட தயாராக உள்ளோம் என என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டத்தில் மாற்றங்களை செய்யவேண்டு மென்றால் நிபுணர்கள் குழு அதனை ஆராய்ந்த பின்னரே மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள அவர் தனிநபர் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தேசிய பாதுகாப்பிற்கான அதிகாரமளிக்கப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் குரோத அரசியலிற்கான விதைகளை தூவி சட்டத்தை மீறி பொதுமக்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்த முயலும் எவரையும் கைதுசெய்ய தயங்கமாட்டோம்.

தங்கள் பதவிகளிற்கு அப்பால் இந்த நாட்டின் குடிமகன் என்ற வகையில தராதரம் பாராமல் அனைவரும் நாட்டின் நிலவும் சட்டத்தை மதித்து, பின்பற்ற வேண்டும். நாட்டின் சட்டங்களை மதிக்கவேண்டும். என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.