Home செய்திகள் ஈழத்துச் சகோதரி அம்பிகையின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும்: கமல்ஹாசன்

ஈழத்துச் சகோதரி அம்பிகையின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும்: கமல்ஹாசன்

27
0

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானிய தலைநகர் லண்டனில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஈழத்துச் சகோதரி அம்பிகை செல்வகுமாரின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும். என க்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம 17ஆவது நாளாக தொடர்கின்ற நிலையிலேயே அவரது உணவுத்தவிர்ப்பு போராட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவளித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ருவிட்டரில் பக்கத்தில் பதிவிடுகையில்,

இன அழிப்புக்கு நீதி கிடைக்கக் கோரி லண்டனில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஈழத்துச் சகோதரி அம்பிகை செல்வகுமாரின் குரலுக்கு பிரிட்டன் செவிமடுக்க வேண்டும். நீதிக்காகப் போராடும் சகோதரியின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.