
பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்று வரும் திருமதி. அம்பிகை அவர்களின் நீதிவேண்டிய அறப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், வேற்றினத்தவர்களுக்கும் தெரியப்படுத்தி வெளியுலகிற்கு பறைசாற்றும் முகமாகவும் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும் இடம் முன்பாக தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா அச்சமும், அது சார்ந்த சட்ட விதிகளும் அமுலில் உள்ள சூழலிலும் மக்கள் இப்போராட்டத்தில் உண்ர்வெழுச்சியோடு பங்குகொண்டுள்ளதை காண முடிகிறது.
குறித்த போராட்ட பகுதியில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ள போதும் இரண்டு மீற்றர் இடை வெளியில் நின்று கொண்டும், முகக் கவசம் அணிந்தும் பொது மக்களுக்கு இடையூறின்றி நடாத்தப்படும் போராட்டத்திற்கு இதுவரை காவல்துறையினர் இடையூறின்றி ஒத்துழைப்பு வழங்கி வருவரு இங்கு குறிப்பிடத்தக்கது.