Home உலக செய்திகள் அம்பிகையின் அறப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்க இன்று (14) லண்டனில் மக்கள் போராட்டம்:

அம்பிகையின் அறப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்க இன்று (14) லண்டனில் மக்கள் போராட்டம்:

83
0

உண்ண மறுத்து உரிமைக்காகவும், நீதிக்காகவும் தன்னை உருக்கி போராட்டம் நடாத்திவரும் திருமதி. அம்பிகை செல்வக்குமாரின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இன்று (14/03) லண்டனில் மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெற உள்ளது.

16 நாட்களாக உணவருந்தாது நீதி வேண்டி போராட்டம் நடாத்தி வரும் அம்பிகையின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் அவரின் பேராட்டத்தை பிரிட்டன் ஏற்று ஆவன செய்ய வேண்டும் என்பதற்காகவும், அம்பிகையின் உயிரை விரைந்து காப்பாற்றும் நோக்கோடும் இம் மக்கள் போராட்டம் இடம்பெறவுள்ளது.

உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறும் 624 Kenton Road, HA3 9NR பகுதியில் இன்று மதியம் 12:00 மணிக்கு அனைவரையும் ஒன்றுகூடி ஒத்துழைப்பு நல்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.