Home உலக செய்திகள் ஐ.நா விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்: UK

ஐ.நா விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்: UK

152
0

இலங்கைக்கு 2015ம் ஆண்டின் பின்னர் விஜயம் மேற்கொண்ட ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற வேண்டுகோளை இலங்கை குறித்த தீர்மானத்தின் நகல்வரைபில் இணைத்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

இலங்கை குறித்த தீர்மானம் பற்றிய தகவல் வழங்கும் சந்திப்பின்போது பிரிட்டன் அறிவித்துள்ளது.

பிரிட்டனின் பிரதிநிதி இந்த சந்திப்பில் இதனை அறிவித்துள்ளதுடன் இலங்கை விஜயத்தின் பின்னர் ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கைகயாளர்கள் பல ஆக்கபூர்வமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தனது நாடு இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தீர்மானத்தின் நகல்வரைபில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை நீக்கவேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ளது.

இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டுவிட்டதன் காரணமாக இது அவசியமில்லை என இலங்கை தெரிவித்துள்ளது. எனினும் கடந்த பத்துமாதங்களிற்கு மேல் கரிசனைக்குரிய விடயமாக இது காணப்பட்டதால் தனது நாடு இந்த நிலைப்பாட்டை எடுப்பதாக பிரிட்டனின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

மார்ச ஏழாம் திகதி வரை 24 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதை வரவேற்றுள்ள பிரிட்டன் எனினும் 90 வீதமானவர்களை புதைக்கமுடியவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நேற்றைய அமர்வின் போது சீனா ரஸ்யா பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.