
பட்டினிப் போராட்டத்தின் 12ம் நாளை எட்டிவிட்ட அம்பிகை செல்வக்குமார் அவர்களின் உடல் நிலை சோர்வுற்று குரல் தளர்வும் ஏற்பட்டுள்ளது.
பாராமுகம் காட்டி வரும் பிரித்தானிய அரசின் செயற்பாடு தமிழர்களின் உரிமைக்கும், நீதிக்குமான போராட்டத்தில் இன்னுமோர் தியாகியின் உயிர்ப் பலிக்கு காத்திருப்பதாகவே தெரிகிறது.
12ஆம் நாளான இன்று இறை வழிபாட்டை முடித்து பின் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உயரிய தியாகிகளான தியாக தீபம் திலீபன், தியாகி அன்னை பூபதி ஆகியோரின் திருவுருவப் படங்களை வணங்கி தனத் ஆசனத்தில் அமர்ந்த திருமதி. அம்பிகை செல்வக்குமாரின் உடல் மிகவும் சோர்வடைந்திருப்பதையும், கண் பார்வை சற்று மங்கலாகி குலர் தளர்ந்து போயுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.
அம்பிகையின் அறப்போராட்டத்திற்கு சர்வதேச மட்டத்தில் ஆதரவு அலைகள் எழுந்துள்ள போதும் அவை அந்தந்த நாட்டிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமையவில்லை என்பதே கசப்பான உண்மை. இதற்கு தற்போதைய கொரோனா அச்சம், மற்றும் போராட்டங்கள் நடத்தவோ ஒன்றுகூடவோ அனுமதி மறுப்பு என்பனவும் காரணமாக உள்ளமை மறுக்க முடியாத ஒன்று.
இந்த நிலையில், அம்பிகையின் நியாயமான கோரிக்கைகள் கொண்ட போராட்டத்தினை வெற்றி பெற வைப்பதோடு, அவரின் உயிரையும் காப்பாற்ற – பிரித்தானியா உட்பட அனைத்து நாடுகளிலும், அந்தந்த நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களோடு நெருக்கத்தை பேணியவர்கள் விரைந்து செயற்பட்டு, போராட்டத்திற்கான ஆதரவுகளையும், உரைகளையும் பெற்று அதனை வெளியிடுவதோடு, பாராளுமன்றத்திலும் அவர்களின் குரலை ஒலிக்கவைப்பதே அவசர தேவையாக உள்ளது.
இன்றைய நாள் காலை 10:00 மணிக்கு அவ வழங்கிய சிறிய உரை (வேண்டுகோள்) இங்கே தருகிறோம்.
இளையோர் ஊடான பரப்புரைக்கும், வேற்றினத்தவர்களுக்காகவும் ஆங்கிலத்திலான உரை கீழே இணைக்கப்பட்டுள்ள்அது.