Home உலக செய்திகள் சிங்கள பௌத்த தீவிரவாதம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது: – விக்டர் ஐவன்

சிங்கள பௌத்த தீவிரவாதம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது: – விக்டர் ஐவன்

529
0

சிங்கள-பௌத்த இனவாத சித்தாந்தத்தின் அரசியல் இயக்கமொன்றாகவும் மற்றும் அதன் சமூகரீதியில் ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகள் இப்போது ஒரு வரலாற்று முடிவை எட்டியுள்ளன என்பதை வெளிப்படுத்த ‘தீவிரவாத சகாப்தத்தின் முடிவு’ என்ற தலைப்பில் கடந்த வாரம் பினான்சியல்டைம்ஸி ல் வெளியான கட்டுரை. கணிசமானஅளவுக்கு பொது வான விதத்தில் தூண்டிவிட்டதாகத் தெரிகிறது.

இந்த கட்டுரையில், சிங்கள பௌத்தம் என்ற பெயரில், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பல்வேறு வடிவங்களில் செழித்து வளர்ந்து வரும் இந்த தீவிரவாத இனவாதம் அதன் வலுவின் உச்சத்தை எட்டிய அதே சமயம் ஒரு வரலாற்று முடிவை நோக்கிச் செல்லும் தவறான அடித்தளங்களை சுட்டிக்காட்டுவேன் என்று நம்புகிறேன்.

கருத்தியல் பின்தங்கிய நிலை, ஒரு பொதுவான பிரச்சினை

இலங்கையின் வகுப்புவாத நெருக்கடி தொடர்பாக வெளிப்படையான கருத்தியல்ரீதியான பின்னோக்கிய தன்மை சிங்கள சமூகத்திற்கு மட்டுமேமட்டுப்பட்டதல்ல.. பறங்கியர் சமூகத்தைத் தவிர அனைத்து சுதேச இனத்தவர்களும் இந்த பிரச்சினையை மிகவும் பின்தங்கிய மற்றும் பழங்குடி மனப்பான்மையிலிருந்து உணரப் பழகிவிட்டனர்.

பறங்கியர் சமூகத்தின் தலைவர்களுக்கு மட்டுமே இது குறித்து பரந்த தாராளவாததன்மைகொண்ட பார்வை இருந்தது.1919 ஆம் ஆண்டில் இலங்கைதேசிய காங்கிரஸ் அமைக்க ப் பட்டதிலிருந்து நாடு சுதந்திரம்பெற்றது வரை இலங்கையில் அரசியலில்பிரவேசித்த முக்கிய தலைவர்கள் மத்தியில் மேற்குலகில் கல்வி கற்றவர்கள் பலர் இருந்தனர்; ஆனால் அவர்களில் எவரும் தாராளவாதத்தின் செல்வாக்கு பெற்றவர்கள் என்று கருத முடியாது. பொன்னம்பலம் அருணாச்சலம் கூட இலங்கை தேசிய காங்கிரசின்ஆரம்ப நாட்களில் அதன் தலைவர்களிடையேஒப்பீட்டளவில் மிகவும் முற்போக்கானதலைவராக இருந்தார்.ஆனால்அவரை ஒரு தாராளவாதத் தலைவராக கருத முடியாது.

1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் கொவிகம சாதியைச் சேர்ந்த சிங்கள தலைவர்கள் பொன்னம்பலம் இ ராமநாதனை சட்டவாக்க சபைக்கு படித்த இலங்கை பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆதர வளித்தனர்., ஏனெனில் இந்த மதிப்புக்குரிய உயர் பதவிக்கு கரவ சாதி வேட்பாளர் நியமிக்கப்படுவதைத் தடுக்க அவர்கள் விரும்பினர். பொன்னம்பலம்இ ராமநாதனுக்கு இது இ ரகசியமல்ல. கொ விகம சாதியைச் சேர்ந்த சிங்கள த் தலைவர்களின் நோக்கம் அவருக்கு நன்றாகவே தெரியும்.

இதற்கிடையில், பொன்னம்பலம் அருணாசலம், எழுதிய ஒரு கட்டுரையில், சிங்கள மற்றும் தமிழ் சமுதாயத்தில் சாதி அமைப்பின் ஆதிக்கம்முறையே கொவிகம மற்றும் வேளாள சாதிகள் என்று கூறியிருந்தார்.

இந்தப் பின்னணியில், வண .. வெலிகம சுமங்கல தேரர் கரவ சாதியின் வரலாறு குறித்து ஒரு நூலை எழுதினார்,அதி அவர் கரவ சாதிகொ விகம சாதியை விட உயர்ந்தது என்று வலியுறுத்தினார், இது இறுதியில் இலங்கையில் சாதி அமைப்பு குறித்த சூடான மற்றும் சர்ச்சைக்குரிய விவாதத்திற்கு வழிவகுத்தது.

வண . வெலிகம சுமங்கல தேரர் பொன்னம்பலம் அருணாச்சலம் கூறிய மேற்கண்ட கூற்றை தனது புத்தகத்தில் ஆரம்ப பகுதியாகப் பயன்படுத்தினார்.சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இனரீதியான பிளவுகள் இருந்தபோதிலும், சிங்கள மற்றும் தமிழ் சமுதாயத்தில் சாதி மோதல்களென வரும்போது சிங்கள கொ விகம சாதி மற்றும் தமிழ் வேளாள சாதியைச் சேர்ந்த இருசாராருமே ஒரே முகாமில் தங்களைக் கண்டுகொண்டனர்

கல்வியறிவு வளர்ச்சி
இலங்கையில் உள்ள சமூகப் பிரிவுகளில் சாதி பிளவுகளின் ஆதிக்கத்தை அடக்குவதற்கு இன மற்றும் மத பிளவுகள் முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ள விதம் கவனிக்கத்தக்கது.

நவீன யுகத்திற்குள் நாடு படிப்படியாக பிரவேசித்ததால் இலங்கைச் சமுதாயம் கல்வியறிவுள்ள சமூகமாக மாற்றமடைய ஆரம்பித்தது. இந்த மாற்றத்தின் முதல் கட்டம் அநகாரிக தர்மபாலாவின் காலத்தில் இடம்பெற்றது

1880 ஆம் ஆண்டில் இலங்கையில் 93 ஆங்கில பாடசாலைகள் மட்டுமே இருந்தன. 1911-12 வாக்கில், இந்த எண்ணிக்கை 242 ஆக உயர்ந்தது. இந்த காலகட்டத்தில் ஆங்கிலபாடசாலைகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 8,887 லிருந்து 35,389 ஆக நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

1880-89 முதல் ஒன்பது ஆண்டு காலப்பகுதியில், 292 மாணவர்கள் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சைக்கு தோற்றினர்., 1910-16 முதல் ஆறு ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. சமூகம் ஒரு கல்வியறிவுள்ள சமூகமாக எவ்வாறு மாறுகிறது என்பது இந்த புள்ளிவிவரங்களிலிருந்து தெளிவாகிறது.

இலங்கையில் கல்வியறிவு விகிதம் ஆண்களுக்கு 26.6% ஆகவும், பெண்களுக்கு 2.5% ஆகவும் 1881 இல் இருந்தது. 1911 ஆம் , ஆண்டளவில் இது ஆண்களுக்கு 40.4% ஆகவும், பெண்களுக்கு 10.6% ஆகவும் வளர்ந்தது. ஆனால் 1911 வாக்கில் கூட, ஆங்கில மொழியின் தேசிய கல்வியறிவு விகிதம் 3.3% ஆக குறைவாகவே இருந்தது. இருப்பினும், 1911 வாக்கில், பூர்வீக மொழிகளில் (சிங்கள மற்றும் தமிழ்) கல்வியறிவு விகிதம் முறையே ஆண்களுக்கும் பெண்களுக்கும் 37.1 மற்றும் 7.3% ஆக உயர்ந்தது. பூர்வீக மக்களில் கணிசமான பகுதியினர் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிடப்பட்ட தகவல்களைப் பற்றிய நல்ல அறிவைப் பெற்றிருந்தனர். ஆனால் அவர்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட விட யங்களை புரிந்துகொள்வதற்கும் விளக்குவதற்கும் ஆங்கிலம் தெரிந்த ஒரு இடைத்தரகரின் உதவியை நாட வேண்டியிருந்தது.

இலங்கையின் வரலாற்றிய ல்
நவீன காலத்திற்கு முன்னைய இலங்கையின் வரலாற்றை நாட்டின் வரலாற்றைப் பதிவுசெய்த முதல் கட்டமாகக் கருதலாம், அதே நேரத்தில் நவீன இலங்கையின் வரலாற்றை அதன் இரண்டாம் கட்டமாகக் கருதலாம். இலங்கையில் பிரிட்டிஷ் நிர்வாகத்தில் அரச ஊழியர்கள் பலரால் இலங்கையின் வரலாறு குறித்த பல சிறந்த புத்தகங்களை வெளியிடுவது இலங்கை நவீன யுகத்திற்குள் நுழைந்ததிலிருந்து வரலாற்றுத் துறையில் மிக முக்கியமான முன்னேற்றங்களில் ஒன்றாகும். நவீன இலங்கையின் வரலாறு குறித்த கலந்து ரை யாடலைத் துவக்கிய முன்னோடியாக இந்த புத்தகங்களைக் கருதலாம்.
சிங்களம், தமிழ் மற்றும் பாளி மொழிகளில் நிபுணத்துவ ம் பெற்ற ஜோ ர்ஜ் டேர் னர், இலங்கையின் பண்டைய இதிகாசமான மகாவம்சத்தைப் பற்றியவிமர்சனத்தை கண்டுபிடித்தார்,

இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டார், ஒன்று இலங்கையின் குறுகிய வரலாறு மற்றும் மற்றொன்று ஒரு விமர்சனரீதியான பகுப்பாய்வு மகாவம்சத்தில். கண்டி இராச்சியத்தின் அரசியலமைப்பு பாரம்பரியம் குறித்து ஜோ ன் டாய்ல் எழுதினார். ஜேம்ஸ் எமர்சன் டென்னன்ட் ‘இலங்கையின் வரலாறு’ என்ற தலைப்பில்நூலை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார், இது இலங்கையின் வரலாற்றின் கலைக்களஞ்சியமாக கருதப்படுகிறது. மேலும், எச்.டபிள்யூ. கோட்ரிங்டன் இலங்கையின் வரலாறு குறித்த முதல் விமர்சனப் படைப்பை வெளியிட்டார்.

இலங்கையின் வரலாற்றில் ஒரு பாரிய சமூகரீதியான ஆர்வத்தைத் தூண்டுவதற்கு பல காரணிகளும் பங்களித்தன. பல நூற்றாண்டுகளாக காலத்தின் அழிவு மற்றும் இடைவிடாத காட்டு அலைகளால் பேரழிவிற்கு உட்பட்ட அனுராதபுரம் மற்றும் பொலநறுவை பகுதிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடிபாடுகளை அடையாளம் காணவும், வரைபடமாக்கவும் புகைப்படம் எடுக்கவும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த கண்டுபிடிப்புகள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் பற்றி வெளியிடப்பட்ட அறிக்கைகள் பொது வான ஆர்வத்தைத் தூண்டின.

மேலும், முல்லர் எட்வர்ட் என்ற ஜே ர்மன் பேராசிரியர் பண்டைய கல்வெட்டுகளைக் கண்டுபிடித்து நகலெடுக்கும் பணியை மேற்கொண்டார்.. அவர் பிரதியெடுத்த கல்வெட்டுகளின் தொகுப்பு 1881 ஆம் ஆண்டில் ‘இலங்கையில் பண்டைய கல்வெட்டுகள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இவ்வாறு, தொல்பொருள் ஆராய்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டு பராமரிக்கப்பட்டன; 1890 ஆம் ஆண்டில் இந்த நோக்கத்திற்காக தொல்பொருள் துறை நிறுவப்பட்டது.

ஜேர்மன் பேராசிரியரான வில்ஹெல்ம் கெய்கர் மகாவம்சத்தின் ஆங்கில பதிப்பையும், தீபவம்சம் ம ற்றும் மகாவம்சத்தின் வரலாற்று மாற்றம் குறித்தநூலையும் வெளியிட்டார். இந்த நோக்கத்திற்காக பேராசிரியர் வில்ஹெல்ம் கீகர் நியமிக்கப்பட்டார் மற்றும் அதற்கான செலவுகளுக்கான பணம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டது.. மகாவம்சத்தை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் பொறுப்பு வண . ஹிக்கடுவே சுமங்கல தேரர் மற்றும் பண்டிட்டொன் அன் ட்ரூஸ் சில்வா படுவந்துடாவே ஆகியோரை நியமித்த பிரிட்டிஷ் அரசாங்கமும் அதை ஒரு புத்தகமாக வெளியிட்டது.

வரலாற்று திரிபு
இலங்கை ஒரு நீண்ட வரலாறையும் மேம்பட்ட நாகரிகத்தையும் கொண்டது என்று நாங்கள் பெருமிதம் கொள்ளக்கூடியதென்பதை பிரிட்டிஷாரே எங்களிடம் சொன்னார்கள்; ஆங்கிலேயர்கள் தங்கள் உடல்களை மூலிகை இலைகளால் மூடிமறைக்கும்போது எங்கள் முன்னோர்கள் நெய்த துணிகளில் அணிந்திருந்தார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் எங்களுக்கு விவரித்த விட யங்களின் உள்ளடக்கங்களும், அவர்கள் கண்டுபிடித்தவை குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளும் ஆங்கிலத்தில் இருந்தன, தர்மபாலா, வாலிசின்ஹ ஹரிசந்திரா மற்றும் அவர்களது சீடர்கள்தான் ஆங்கிலம் தெரியாத பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு அவைகுறித்து விளக்கமளித்தனர்.

இலங்கையில் உள்ள சிங்கள பவு த்த சமூகம் உலகின் அனைத்து மக்களிலும் மிகவும் மேன்மையானதெனவும் உன்னதமானது என்றும் சாதாரண சிங்கள மக்கள் சந்தேகிக்காத அளவிற்கு அவர்கள் நம்ப வைத்தார்கள்;அத்துடன் வரலாற்று ரீதியான கண்டுபிடிப்புகள் இலங்கையின் பண்டைய நாகரிகம் உலகின் மிகப் பெரிய மற்றும் அற்புதமான நாகரிகம் என்பதை நிரூபித்துள்ளது.என்பது பற்றியும் அவர்கள் நம்பவைத்தனர்.
அநகாரிக தர்மபாலாவை ஒரு வல்லமைமிக்க தூதராக , தம்ம போதகராகக் கருதினாலும், அவரை ஒரு நல்ல அறிஞராக மதிப்பிட முடியாது. வரலாறு என்ற விட யத்தில் அவருக்கு புறநிலை அறிவு இல்லை. ஆனால் அவரது சிங்கள பவு t த்த சீடர்கள் அவரை ப வு த்தர்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு முக்கிய தலைவராக மட்டுமல்லாமல், அனைத்தையும் அறிந்த ஒரு சிறந்த அறிஞராகவும்அங்கீகரித்தனர்.

ஐதீகத்தை நிறுவனமயமாக்குதல்
இதுவரை, உலகின் எந்தவொரு ஆராய்ச்சி நிறுவனமும் உலகின் மிகப் பெரிய இனக்குழு குறித்து ஆய்வு நடத்தவில்லை. இலங்கையில் ஒரு மேம்பட்ட பண்டைய நாகரிகம் இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இது உலகின் மிக முன்னேறிய 10 பண்டைய நாகரிகங்களின் பிரிவில் சேர்க்கப்படவில்லை. உலகின் மிக முன்னேறிய நாகரிகமாக இருப்பது ஒருபுறம் இருக்கட்டும்! ஆயினும்கூட, அநகாரிக தர்மபால வின் விளக்கம் சாதாரண சிங்கள ப வு த்த மக்களால் ஒரு வரலாற்று உண்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது மட்டுமல்லாமல், புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அநகாரிக தர்மபாலவால் மக்களின் மனதில் வேரூன்றப்பட்ட மூடநம்பிக்கைகளை சவால் செய்வதற்கு அவர்கள்கொண்டிருந்த தயக்கம் அல்லது பயம்சிலசமயம் இதற்கு காரணமாக இருக்கலாம்.

வரலாற்றில் இந்த போதனைகளால் சிங்கள ப வு த்த மனப்பான்மையில் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. நாம் இப்போது 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தாலும், சிங்கள ப வு த்தர்களில் பெரும்பான்மையினர் விஜய மன்னருக்கும் புத்தருக்கும் இடையே நெருங்கிய இரத்த உறவு இருந்ததாக இன்னும் நம்புகிறார்கள்.

விஜயனும் அவரைப் பின்பற்றுபவர்களும் புத்தரின் வழிகாட்டுதலுடனும் ஆசீர்வாதங்களுடனும் இலங்கைக்கு வந்தனர் மற்றும் புத்தரின் பரிநிர்வாண நாளன்று காலமானார்கள். புத்தர்காலமானபின் புத்தமதம் இலங்கையில் நிறுவப்பட்டு பாதுகாக்கப்படும் என்றும் எனவே விஜயன் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் புத்தர் தெய்வங்களின் இறைவனான சக்காவிடம் கூறியிருந்தார்.

இறுதியில், ப வு த்தம் சிங்கள இனத்தின் இந்த கலவையானது, அனுராதபுரம் மற்றும் பொலநறுவை காலங்களில் உலகின் மிகப் பெரிய மற்றும் உன்னதமான பண்டைய நாகரிகத்தை உருவாக்கியது.சிங்கள ப வு த்த மக்களின் மனதில் இந்த நம்பிக்கைகளின் முறைமையால் செய்யப்பட்ட திரிபு மகத்தானது. இவ்வளவுக்கு ம் , மற்ற இனத்தவர்கள் அனைவரும் தங்களை விட தாழ்ந்தவர்கள் என்று நினைத்து அவர்கள் வளர்த்துக் கொண்ட ஆணவ மனப்பான்மை பவு த்தரல்லாதவர்கள் மீது மட்டுமல்ல, சிங்கள பவு த்தர்களிடமும் பெரும் தீங்கு விளைவிக்கும். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சிங்கள ப வுத்தம் என்ற பெயரில் பின்பற்றப்பட்டு வரும் இந்த தீவிரவாத வேலைத்திட்டம் இப்போது உச்சத்தை எட்டியுள்ளது, அதே நேரத்தில் அதன் தோல்வியின் மிகக் குறைந்த மட்டத்திற்கும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த நிகழ்வு ஒரு தனித்துவமான காட்சியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும், இதில் இலங்கை ஒரு அசிங்கமான மற்றும் இருண்ட சகாப்தத்தின் வரலாற்று முடிவுக்கு வந்துள்ளது, இது ஒரு புதிய சகாப்தத்தை முன்னிலைப்படுத்த வழி வகுக்கிறது, அ து அழகாகவும் நியாயமாகவும் இருக்கும்.
-பினான்சியல் டைம்ஸ்-