Home செய்திகள் “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்” விசாரணை அறிக்கை மீதான விவாதம் இன்று பாராளுமன்றில்:

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்” விசாரணை அறிக்கை மீதான விவாதம் இன்று பாராளுமன்றில்:

7
0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை யாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்துக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் தம் மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (10/03) புதன்கிழமை, பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான அவகாசம் இம் முறை இல்லை எனினும், காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை உறுப் பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது.