
அறப்போராளி அம்பிகையின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்,
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் தமிழர்கள் ஒன்றுதிரண்டு கவனயீரப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினர்.
கொவிட்-19 சட்டவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் உணர்வெழுச்சியுடன் அறப்போராளி அம்பிகைக்கு ஆதரவாக ஒன்றுகூடி தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
அம்பிகையின் 4 அம்சக் கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தி வீதியின் ஓரத்தில் நின்று ஒலிவாங்கி மூலம் ஆதரவுக்குரல்களை எழுப்பியிருந்தனர்.