Home தாயக செய்திகள் முல்லையில் இடம்பெற்ற மகளீர் தின பேரணி – கறுப்பு உடை அணிந்து கலந்துகொண்ட மக்கள்!

முல்லையில் இடம்பெற்ற மகளீர் தின பேரணி – கறுப்பு உடை அணிந்து கலந்துகொண்ட மக்கள்!

41
0

சர்வதேச மகளீர் தினமான இன்று (08/03) முல்லைத்தீவில் கறுப்பு உடை அணிந்து மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு – புனித இராஜப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பித்த பேரணியில், இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும், பொது மக்களும் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமது உருமைகளையும், நீதியையும் கோரும் கோஷங்கள் அடங்கிய வெள்ளை நிறத்தினாலான நீண்ட பனர்களை பேரணியின் இரு மருங்கிலுமாக பிடித்து சென்றமை அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது.

இந் நாட்டில் பெண்களுக்கு எங்கே சுதந்திரம் இருக்கிறது…?

இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே..?

காடளிப்பையும், காணி அபகரிப்பையும் உடன் நிறுத்து!

இராணுவமே… எம் சொந்த நிலங்களை விட்டு வெளியேறு!

போன்ற பல கோஷங்களை பேரணியில் காணக்கூடியதாக இருந்தது.