Home செய்திகள் மட்டக்களப்பில் இடம்பெற்ற மகளிர் தின கவனயீர்ப்பு போராட்டம்:

மட்டக்களப்பில் இடம்பெற்ற மகளிர் தின கவனயீர்ப்பு போராட்டம்:

20
0

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் பெண்கள் உரிமைகளை வலியறுத்தும் முகமாக மூன்று கோரிக்கைகளை முன்நிறுத்தி கவனயீர்ப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசே பெண்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் உமது பங்கு என்ன?

மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அரசு உறுதிப்படுத்துமா? பெண்களின் மனித உரிமைகள் எங்கே?

வீட்டினை ஆளும் பெண்கள் நாட்டினை ஆளமுடியாதா? போன்ற சுலோக அட்டைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடந்து கவனயீர்ப்பு நிகழ்வுக்கு வருகை தந்திருந்த உதவி அரசாங்க அதிபரிடம் மேற்குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டு போராட்டம் நிறைவுபெற்றது.

இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் எற்பாட்டில் சர்வதேச மகளிர் தினமான இன்று அமைதி முறையிலான கவனயீர்ப்புப் போராட்டமொன்று மாமாங்கம் ஆலயம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கவனயீர்ப்பு நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.